internet

img

புதிய வசதி ஒன்றை வழங்கிய பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம், ஆஃப் பேஸ்புக் ஆக்டிவிட்டி (Off-Facebook Activity) எனும் புதிய வசதியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

உலகின் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலியாக பேஸ்புக் திகழ்கிறது. பயனர்களுக்கென பல புதிய வசதிகளை பேஸ்புக் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆஃப் பேஸ்புக் ஆக்டிவிட்டி (Off-Facebook Activity) எனும் புதிய வசதியை பேஸ்புக் பயனர்களுக்கும் வழங்கி உள்ளது. இந்த வசதியின் மூலம், பேஸ்புக்கை பயன்படுத்தாத நேரத்தில் மற்ற இணையதளங்களைப் பயன்படுத்தும்போது பேஸ்புக் எவ்வாறான விபரங்களை சேகரிக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே பயனர்கள் தங்களுடைய பேஸ்புக் கணக்கு குறித்து தெளிவாகவும், பயமின்றியும் இருக்க முடியும்.

மேலும் இவ்வாறு சேகரிக்கப்படும் விபரங்களின் சாராம்சத்தினையும் குறித்த வசதியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியை தற்போது சில நாடுகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது. விரைவில், இந்த வசதியை அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. 

;